உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண்டக்டர் தற்கொலை முயற்சி

கண்டக்டர் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் விடுப்பு வழங்காததால் போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து அரசு பஸ் கண்டக்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். திண்டுக்கல் முள்ளிப்பாடி ஆரோக்கியசாமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் திண்டுக்கல் நத்தம்ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை 2 பணிமனையில் கண்டக்டராக பணியில் உள்ளார். கடந்த சில தினங்களாக செல்வராஜ்.உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் நேற்று காலை தன் அலுவலகத்திற்கு வந்து தனக்கு விடுப்பு தருமாறு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வந்தார். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளநிலையில் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ்,தன் டூவீலரில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த சக ஊழியர்கள் செல்வராஜை,மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி குளிரவைத்தனர். தொடர்ந்து செல்வராஜ்,மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்த தாலுகா போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
மே 07, 2024 22:06

நடத்துனர் எடுத்த முடிவு சரிதான் போலும் உடல் நிலை சரியில்லாத நிலையில் பணிக்கு வந்து பணியின் இடையில் உயிர் போயிருந்தால் மொத்த பயணியர்க்கும் இடைஞ்சல்தானே அது சரி, உடல் னிலை சரியில்லை என்று நேரில் வந்து விடுப்புக்கு மனு கொடுத்தும் இரக்கமின்றி மறுத்த அந்த அதிகாரிக்கு உடல் நிலை என்றுமே இப்படியே இருக்குமா?


Mani . V
மே 07, 2024 21:47

கருணையே இல்லாத அந்த அதிகாரிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதுங்களா யுவர் ஹானர்?


சமீபத்திய செய்தி