உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டுப்படுத்துங்க : சிறார்கள் ஓட்டும் வாகனங்களால் விபத்துக்கள்: ஓட்டுனர் உரிமம் இன்றி அதிவேகத்தில் பயணம்

கட்டுப்படுத்துங்க : சிறார்கள் ஓட்டும் வாகனங்களால் விபத்துக்கள்: ஓட்டுனர் உரிமம் இன்றி அதிவேகத்தில் பயணம்

மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, நகர, ஊராட்சி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். குறிப்பாக சிறார்கள் அதிவேகமாகவும் மூன்று நபர்கள் அமர்ந்தும் பயணிக்கின்றனர். இதில் பெரும்பாலானார் ஹெல்மெட் அணிவது கிடையாது. சிறார்கள் அதி வேகமாக செல்வதால் எதிரே வரும் வாகனங்களில் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. கல்லுாரி, பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் அதிகம் பயணிக்கின்றன. ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதால் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் உயிரிழப்பு, பலத்த காயம் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.18 வயதிற்கு குறைவாக உள்ள சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி தவறு. பெற்றோர்கள்,பள்ளிகளில், சிறார்களுக்கு இரு சக்கர வாகனத்தை குறிப்பிட்ட வயதிற்கு மேல் முறைப்படி உரிமம் பெற்று ஓட்ட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இருசக்கர வாகனத்தை இயக்குவது கண்டறிந்தால் பெற்றோரை அழைத்து உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ