| ADDED : நவ 25, 2025 05:50 AM
கள்ளிமந்தையம்: திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கட்டிப்போட்டு, 18 சவரன் நகை, 38,000 பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையரை போலீசார் தேடுகின்றனர். கள்ளிமந்தையம் அருகே தும்பச்சிபாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி, 50. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகன், மகள் வெளியூரில் உள்ளனர். தோட்டத்து வீட்டில், தம்பதி தனியாக வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீட்டின் வெளியே இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது, முகமூடி அணிந்து வந்த மூன்று பேர், இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி, கட்டிலில் கட்டி போட்டனர். பீரோவில் இருந்த 18 சவரன் நகை, 38,000 ரூபாய், மொபைல் போன்களை பறித்து தப்பி சென்றனர். டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவு கொண்டு கொள்ளையரை தேடுகின்றனர்.