உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடை மலையில் அடர் பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்ட வாகனங்கள்

 கொடை மலையில் அடர் பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்ட வாகனங்கள்

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் லேசான சாரலுடன் பனிமூட்டம் நிலவியது. இம்மலைப்பகுதியில் சில தினங்களுக்கு முன் தொடர் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேல்மலைப் பகுதியான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கிளாவரையில் நேற்று மதியத்திற்கு பின் பனிமூட்டம் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது. எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மாலை வரை இந்நிலை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி