| ADDED : செப் 23, 2011 10:50 PM
சின்னாளபட்டி : தமிழக வாக்காளர்களுக்கு, இது தேர்தல் திருவிழா காலம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் மேளா ஜரூராக நடக்கும் பருவம்.
உள்ளாட்சி அமைப்புகளின் சுயமான நிதி ஆதாரத்திற்கு அடிப்படையானது வீடு,
சொத்து, தொழில், குடிநீர் வரிகள் உள்ளிட்டவை தான். மாநகராட்சி முதல் கிராம
ஊராட்சி வரை, இந்த வரிகளை செலுத்துவதில் பொதுமக்கள் மெத்தனமாக இருப்பதும்;
பணியாளர்கள் தேடி சென்று வசூல் நடத்துவதும் வாடிக்கையான விஷயம். நிலுவை:
தற்போது, உள்ளாட்சி தேர்தலில் எந்த பதவிக்கு போட்டியிட்டாலும், அந்த
உள்ளாட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, நிலுவையில் இருக்க கூடாது. மனு
தாக்கல் துவங்கியுள்ள நிலையில், போட்டியிட விரும்புவோர், உள்ளாட்சி
அலுவலகங்களை தேடி சென்று, வரி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வேலை
மிச்சம்: இதனால், வரி வசூலிக்கும் பணியாளர்கள், மனு தாக்கல் நேரமான காலை
11 முதல் மாலை 3 மணி வரை, அலுவலகத்திலேயே இருந்து வரி வசூலிக்கின்றனர்.
இதன் பிறகு தான், வசூலுக்காக வெளியே செல்கின்றனர். மனு தாக்கலுக்கு உரிய
கால அவகாசம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் மேளா நடக்கும் வசந்த
காலமாக உள்ளது.