உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 7 ஆண்டு சிறை

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 7 ஆண்டு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே நகை பறிப்பு வழக்கில் இருவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திண்டுக்கல் அருகே அனுமந்தன்நகர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள் (56). கடந்த ஆண்டு, மார்ச் 20 ல், ரயில்வே மருத்துவமனை அருகில் நடந்து சென்றார். கிருஷ்ணசாமிபிள்ளை சந்து பாலாஜி (30), திருமலைசாமிபுரம் மணி கண்டன் (30) ஆகியோர் இவரது ஆறு பவுன் நகையை பறித்து சென்றனர். நகர் வடக்கு போலீசார் விசாரித்து, சப் கோர்டில் வழக்கு தொடுத்தனர். இருவருக்கும் சிறை தண்டனை விதித்து நீதிபதி வெங்கிடுசாமி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி