உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் பயணிகள் கவனத்திற்கு திருட்டை தவிர்க்க அறிவுரை

பஸ் பயணிகள் கவனத்திற்கு திருட்டை தவிர்க்க அறிவுரை

வடமதுரை:பஸ் பயணிகள், உடைமைகளை திருட்டில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, வடமதுரை போலீசார் துண்டுபிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். அதில் கூறியிருப்பதாவது:* பஸ்களில் கைக்குழந்தையுடன் சில பெண்மணிகள் உங்கள் அருகில் நின்று கொண்டோ, அமர் ந்து கொண்டோ, குழந்தையை தாலாட்டுவது போல நடிப்பர். உங்கள் கவனம் சிதறும் நேரத்தில் உடைமைகளை திருடுவார்கள். * பஸ்சில் பயணிக்கும் போது கைப்பை, பர்ஸ், நகைகள் அணிந்திருந்தால் அவற்றின் மீது கவனமாக இருக்கவும்.* அடிக்கடி உங்கள் உடைமைகளை சரிபார்க்கவும். கண்டிப்பாக, ஒவ்வொரு பஸ் நிறுத்தத்தின் போதும் சரிபார்க்கவும்.* சந்தேக நபர்கள் என, கருதினால், நடத்துனர், டிரைவரிடம் தகவல் தரவும். * உங்களது கவனக்குறைவு, இரக்க குணத்தால் உங்கள் உடைமைகளை இழந்து விட வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை