உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 16 பவுன் நகை திருட்டு

16 பவுன் நகை திருட்டு

நத்தம்:நத்தத்தில் மின்வாரிய ஊழியர் போல நடித்து, 16 பவுன் நகை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.நத்தம் பஜார் தெருவை சேர்ந்தவர் திருமலை,71, வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மின்வாரியத்தில் இருந்து வருவதாக கூறிய ஒரு வாலிபர், ''உங்கள் வீட்டு மீட்டரில் 'ஷாக்' அடிக்கிறது,'' என்றார்.முதியவர் வீட்டை திறந்தபோது, உள்ளே புகுந்து 16 பவுன் நகையை திருடி சென்றார். இதன் மதிப்பு இரண்டரை லட்ச ரூபாய். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ