உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூட்டுறவு மேலாண்மை பட்டப்படிப்பு துவக்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டப்படிப்பு துவக்கம்

திண்டுக்கல்:திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இளங்கலை பட்டப் படிப்புகளான பி.காம்., பி.சி.ஏ., மொழியியல் மற்றும் முதுகலை பட்டப்படிப்பான எம்.பி. ஏ., ஆகியவற்றுக்கு சேர்க் கை நடந்து வருகிறது. இப்பட்டப்படிப்பு வகுப்புகள் விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடக்கும். இதற்கு கல்லூரி போல செமஸ்டர் பாடத்திட்டம் நடத்தப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை, பட்டப் படிப்புகளில் சேரலாம். இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதுகலை பட்டப் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், பழநி ரோடு, பை பாஸ் அருகில் உள்ள அலுவலகத்தில் தொடர்பு கொ ண்டு தெரிந்து கொள்ளலாம், என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் வில்வசேகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி