உள்ளூர் செய்திகள்

குடத்துடன் மறியல்

பழநி : பழநி நகராட்சி ஐந்தாவது வார்டில், கட்டபொம்மன் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள போர்வெல் பழுதடைந்ததால், மூன்று மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி, நேற்று ரணகாளியம்மன் கோயில் நால்ரோட்டில் இப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். பழநி டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ