திண்டுக்கல் : தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தாமல், தொடர்ந்து பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி, பேரூராட்சிகளில் முதன் முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக, சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்படுகின்றன. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 222 தொகுதிகளின் மின்னணு இயந்திரங்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர், எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம், முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட்ட திருப்புத்தூர், திருச்சுழி, திருச்செந்தூர், எழும்பூர், மற்றும் திருவண்ணாமலை, பெரியகுளம், வேப்பனஹள்ளி, கள்ளக்குறிச்சி, திருவிடைமருதூர், கும்பகோணம் தொகுதிகளின் தேர்தல் முடிவு குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் 12 தொகுதிகளுக்கான மின்னணு இயந்திரங்கள் மட்டும் தொடர்ந்து பாதுகாக்கப்படும். 2692 ஓட்டுச்சாவடிகள் அமைப்பு இறுதிப்பட்டியல் இன்று வெளியீடுதிண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலுக்கு, திண்டுக்கல் மாவ ட்டத்தில் 2692 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஓட்டுச்சாவடி இறுதிப்பட்டியல் இன்று வெளியாகிறது.உள்ளாட்சி தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அனைத்து கட்சி கூட்டத் தை கூட்டி ஓட்டுச்சாவடிகளின் இறுதிப்பட்டியல் வெளியிட கருத்து கேட்கப்பட்டது.எரியோடு, திண்டுக்கல் நகராட்சி பகுதிகளில் நான்கு ஓட்டுச்சாவடிகளை மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது. இந்த ஓட்டுச்சாவடிகளில் மீண்டும் ஆய்வு நடத்திய அதிகாரிகள், 'விதிமுறைப்படி தான் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றம் செய்ய தேவையில்லை' என, தெரிவித்தனர். இதையடுத்து இன்று ஓட்டுச்சாவடி இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.திண்டுக்கல், பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகாரட்சிகளில் 264; 23 பேரூராட்சிகளில் 382; 306 ஊராட்சிகளில் 2046 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன.