உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காந்தி கிராம அறக்கட்டளையுடன்மூலிகை நிறுவனம் ஒப்பந்தம்

காந்தி கிராம அறக்கட்டளையுடன்மூலிகை நிறுவனம் ஒப்பந்தம்

காந்திகிராமம் : காந்திகிராம அறக்கட்டளை மற்றும் மத்திய மூலிகை, நறுமண தாவர நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூலிகை, நறுமண தாவர சாகுபடி பரப்பளவு மிகவும் குறைவாக உள்ளது. இவற்றை சாகுபடி செய்ய விரும்பினாலும், விதை தேர்வு, சாகுபடி தொழில்நுட்பம், அரசு உதவி திட்டங்கள் குறித்து ஆலோசனைகளுக்கு வழியில்லை.மத்திய மூலிகை, நறுமண தாவர நிறுவன தலைமையகம் லக்னோவில் உள்ளதால் விவசாயிகள் தொடர்பு கொள்வதில் சிரமம் இருந்தது. இதனால் மூலிகை நறுமண தாவர சாகுபடியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் மூலிகை நறுமண தாவர நிறுவனத்தின் சேவை மையம் காந்திகிராமத்தில் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக காந்திகிராம அறக்கட்டளை, மத்திய மூலிகை நறுமண தாவர நிறுவனத்திற்கு இடையே 10 ஆண்டு கால ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை