உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டு இயந்திரம், உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் பதிவான ஓட்டுக்களை அழிக்கும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, வேடசந்தூர், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம் தொகுதிகள் உள்ளன. தேர்தல் வெற்றி குறித்து யாரும் வழக்கு தொடரவில்லை. இதனால் இந்த இயந்திரங்கள் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக மாவட்ட கருவூலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்த்து, பதிவாகியுள்ள ஓட்டுக்களை அழிக்கும் பணி நடந்து வருகிறது.இதில் தேர்தல் அலுவலக பணியாளர், ஊரக வளர்ச்சித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் தாசில்தார் பாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) சக்திவேல், நேர்முக உதவியாளர் (தேர்தல்) வளநாட்டுத்துரை மேற்பார்வையில் பணிகள் நடக்கின்றன.ஓட்டுக்கள் அழிக்கும் பணி முடிந்தவுடன் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பப்படும். ஒரு ஓட்டுச்சாவடிக்கு இரண்டு இயந்திரங்கள் வீதம் பயன்படுத்தப்படவுள் ளன. இதன்படி நகராட்சிகளில் 528; பேரூராட்சிகளில் 820 இயந்திரங்கள் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை