உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாராயம் காய்ச்சிய தி.மு.க., பிரமுகர் கைது

சாராயம் காய்ச்சிய தி.மு.க., பிரமுகர் கைது

பழநி : சத்திரப்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய தி.மு.க., வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார். சத்திரப்பட்டி போலீசார், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் ரோந்து சென்றனர். ராமபட்டினம்புதூர் அருகே சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த, இதே ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 42, அவரது சகோதரர் கருப்பசாமி, 40, மணி, 49, ஆயக்குடியை சேர்ந்த பாலசந்திரன், 48, ஆகியோரை கைது செய்தனர். தி.மு.க., பிரமுகரான பன்னீர்செல்வம், சிந்தலவாடம்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர். இவர்களிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ