உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேர்தல் பயிற்சியில் குழப்பம் "சுற்றில் விட்ட உத்தரவுகள்

தேர்தல் பயிற்சியில் குழப்பம் "சுற்றில் விட்ட உத்தரவுகள்

பழநி : பழநியில் உள்ளாட்சி தேர்தல் பயிற்சிக்காக வழங்கப்பட்ட இரு வேறு உத்தரவுகள், ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. உள்ளாட்சி தேர்தலுக்காக ஓட்டுச்சாவடி அதிகாரி, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஈடுபடும் கல்வி, வருவாய்துறை அலுவலர், ஆசிரியர்களுக்கு, உள்ளாட்சி அதிகாரிகள் உத்தரவுகளை வழங்கியுள்ளனர். நேற்று பழநியில், நகராட்சி தேர்தல் அலுவலர் பயிற்சி வகுப்புகள் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்; ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர்களுக்கான வகுப்புகள், திண்டுக்கல் ரோடு மண்டபத்திலும் நடந்தன. பழனியாண்டவர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் சார்பில் பயிற்சிக்கான இருவேறு உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன. இதனால் குழப்பமடைந்த பலர், பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவில்லை. உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட சிலருக்கு, நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சி அதிகாரி ஒருவர் கூறியது: கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பணிபுரிவோர் பட்டியலை, இரு அமைப்புகளிடமும் வழங்கியதால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்கும். இருப்பினும் ஊரக வளர்ச்சித்துறை உத்தரவு வழங்கப்படும்போது, பிற அமைப்புகளின் உத்தரவு பெற்றிருந்தால் தவிர்க்க, அறிவுறுத்தப்பட்டது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ