உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மக்களுக்காக உழைப்பேன் மார்க்சிஸ்ட் வேட்பாளர் உறுதி

மக்களுக்காக உழைப்பேன் மார்க்சிஸ்ட் வேட்பாளர் உறுதி

குஜிலியம்பாறை : ''அடிப்படை வசதிகள் முழுமை பெறவும், மக்களுக்காகவும் எந்த நேரமும் உழைப்பேன்,'' என, குஜிலியம்பாறை ஒன்றியம், கூம்பூர்-வாணிக்கரை ஒன்றிய கவுன்சில் வார்டு வேட்பாளர் ஆர்.ஆறுமுகம் (மார்க்சிஸ்ட் ) கூறினார்.தற்போதைய ஊராட்சி ஒன்றிய தலைவரான இவர், சாதனை, வாக்குறுதிகளை கூறி ஓட்டு சேகரிக்கிறார்.அவர் கூறியது:கடந்த, ஐந்து ஆண்டுகளில் யூனியன் அளவில் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கூம்பூர்-வாணிக்கரை கவுன்சில் வார்டில், 23 இடங்களில் புதிய குடிநீர் போர்வெல் அமைத்து, தன்னிறைவு காணப்பட்டுள்ளது. எட்டு இடங்களில் மண் சாலைகள், தார் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. நெற்களங்கள்-6, சிமென்ட் ரோடுகள்-12, நாகடமேடை-9, அங்கன்வாடி-2, நூலகம்-2, பாலங்கள்-4, தொகுப்பு வீடுகள் 100, மயான மேம்பாடு உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.மீண்டும் வெற்றி பெற்றால், சமுதாய கூடங்கள் அமைக்கப்படும். பொது, தனி நபர் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு சுகாதரம் மேம்படுத்தப்படும். கூம்பூரில் சந்தை மேம்பாடு, வணிக வளாகம் அமைக்கப்படும். வாணிக்கரையில் கால்நடை கிளை நிலையம், கூம்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம், புதூரில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க முயற்சி எடுக்கப்படும். மண் சாலைகள் தார், சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும். அடிப்படை வசதிகள் முழுமை பெறவும், மக்களுக்காகவும் எந்த நேரமும் உழைப்பேன். மக்கள் எளிதில் அணுகும் வண்ணம், சிறந்த சேவகனாக பணி செய்வேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ