உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமலையில் கருங்காலி: வனத்துறை கண்காணிப்பு

சிறுமலையில் கருங்காலி: வனத்துறை கண்காணிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் உள்ள கருங்காலி மரங்களை கண்காணிப்பது,வன விலங்குகள் வேட்டையை தடுப்பது போன்ற பணிகளில் வனத்துறையினர் 15 பேர் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் சிறுமலையில் காட்டுமாடுகள்,பன்றிகள்,குரங்குகள் என வனவிலங்குகள் ஏராளமாக வாழ்கின்றன. விலை உயர்ந்த கருங்காலி மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் என தாவரங்களும் உள்ளன. விலங்குகளை வேட்டையாடுவதோடு கருங்காலி மரங்களை தேடி அலைகின்றனர். இதை கண்காணிக்கும் விதமாகவும்,வன விலங்குகள் வேட்டையை தடுக்கவும் சிறுமலை வனத்துறை ரேஞ்சர் மதிவாணன் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள்,வனவர்,வனக்காப்பாளர்கள் என 15 பேர் தினமும் சுழற்சி முறையில் சிறுமலை வனப்பகுதியில் இரவு,பகல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கருங்காலி மரங்களை பதுக்கிய ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமலைசெக்போஸ்டில் மர லோடுகள் ஏற்றி செல்லும் லாரிகளை தீவிரமாக சோதனை செய்வதாகவும்,கருங்காலி மரங்கள் காடுகளின் மையப்பகுதியில் இருப்பதால் எளிதில் கடத்த முடியாது எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ