உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தெற்காசிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி திண்டுக்கல் சந்தைக்கு வரத்து குறைந்தது மகாராஷ்டிரா பல்லாரி

 தெற்காசிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி திண்டுக்கல் சந்தைக்கு வரத்து குறைந்தது மகாராஷ்டிரா பல்லாரி

திண்டுக்கல்: தெற்காசிய நாடுகளில் பல்லாரி தேவை அதிகரித்த நிலையில் அதிகளவில் ஏற்றுமதியாவதால் திண்டுக்கல் சந்தைக்கு மகாராஷ்டிரா பல்லாரி வரத்து குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் தரகு மண்டி வெங்காயம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் சந்தை பிரசித்திப் பெற்றது. வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே இயங்கும். மகாராஷ்டிராவில் இருந்து வரும் பல்லாரி அழுகாத திறன் கொண்டது என்பதால் வியாபாரிகளிடம் அதிக வரவேற்பு உள்ளது. இச்சந்தையில் சந்தை நடைபெறும் நாள் ஒன்றுக்கு ரூ.1.5 கோடியில் இருந்து ரூ. 2 கோடி வரை வர்த்தகம் நடக்கும். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறுவடை திருநாளாக கொண்டாடுவர். இதோடு மலேசியா, தாய்லாந்தில் இலையுதிர் காலம் கொண்டாடுவர். இதன் காரணமாக அந்நாடுகளில் உள்ள ஓட்டல்களில் சின்னவெங்காயம், பல்லாரி தேவை அதிகரித்ததால் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் சந்தைக்கு பல்லாரி வரத்து குறைந்துள்ளது. திண்டுக்கல் தரகு மண்டி வர்த்தகர்கள் சங்கத் தலைவர் முருகேசன் கூறியதாவது: ஆசிய நாடுகளில் பல்லாரி தேவை அதிகரிக்க இங்கு வரத்து குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 38 லாரிகளில் தலா ஒரு லாரிக்கு 40 டன் பல்லாரி வந்த நிலையில் தற்போது ஒரு லாரிக்கு 35 முதல் 26 டன் பல்லாரி மட்டுமே வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ