உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் காட்டுப்பன்றி தாக்கி விவசாயி காயம்

கொடையில் காட்டுப்பன்றி தாக்கி விவசாயி காயம்

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூண்டியைச் சேர்ந்த விவசாயி பாலமுருகன் 50. இவர் நேற்று அதிகாலை வீட்டின் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்ற போது மெயின் ரோட்டோர புதரிலிருந்த காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்பகுதியில் வனவிலங்குகளால் விவசாயிகள் தாக்கப்படுவதும், விவசாய பயிர்கள் சேதம் அடைவதும் தொடர்கிறது. இதற்கு இழப்பீடு வழங்கிய போதும் விவசாயிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகின்றனர். சில மாதங்களுக்கு முன் பூண்டி பகுதியில் விவசாயி, அவரது மனைவி உட்பட மூவரை காட்டுபன்றி தாக்கி படுகாயம் அடைந்த நிலையில் அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர். வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதாக வனத்துறையினர் உறுதியளித்து சென்றனர். ஆனாலும் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை