உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டுப்பன்றி, குரங்குகளால் விவசாயம் பாதிப்பு கொடை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குமுறல்

காட்டுப்பன்றி, குரங்குகளால் விவசாயம் பாதிப்பு கொடை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குமுறல்

கொடைக்கானல்: காட்டுப்பன்றி, குரங்குகளால் விவசாயம் பாதிப்பதாக விவசாய் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மண்டல துணை தாசில்தார் ஜெயராஜ் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., பிரபாகரன்,கால்நடை உதவி இயக்குனர் பிரபு, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ, போக்குவரத்து கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலை கண்காணிப்பாளர் மணிகண்டன், வனவர்கள் மதிவாணன், சுபாஷ் ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் விவாதம்

அசோகன், பேத்துப்பாறை : பேத்துப்பாறை பகுதியில் அரசு தரிசு நிலங்கள் பிளாட் அமைத்து விற்கும் போக்கு உள்ளது. வருவாய்த் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இது கண்டிக்கத்தக்கது.மண்டல துணை தாசில்தார் : ஆர்.டி.ஓ.,விடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். கருப்பையா, பெருமாள் மலை : மேல் மலைப் பகுதியில் ஒரு பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் மற்றொரு பகுதி கொடைக்கானல் வன சரணாலயமாக உள்ளது.புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு அவர்களை எளிதில் அணுக முடியாத நிலை உள்ளது. இதை மீண்டும் கொடைக்கானல் வனத்துறையில் இணைக்க வேண்டும்.வனவர் : வனத்துறை உயர் அதிகாரிகள் பேசி வருகின்றனர்.அசோகன், பேத்துப்பாறை : பேத்துப்பாறை அஞ்சு வீடு வயல்வெளிக்கு ஊராட்சி ஒன்றியம் மூலம் அமைக்கப்பட்ட ரோடு பூமி பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில் சில தனியார் அமைப்பின் துாண்டுதலில் விதிமீறல்களுடன் ரோடு மாற்று பாதையில் அமைக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும்.பி.டி.ஓ.,: நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.விவேகானந்தன், மன்னவனுார் : மன்னவனுார் உள்ளிட்ட மேல்மலை கிராமத்தினர் சீசன், ,அவசர காலங்களில் போக்குவரத்து நெரிசலால் வழக்கமான ரோடை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பேரிஜம் ரோட்டை மாற்று ரோடாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிலையில் கொடைக்கானலை எளிதில் வந்தடைய முடியும்.வனவர் : வனத்துறை உயரதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்.அசோகன், பேத்துப்பாறை : கொடைக்கானலில் தொடர் விடுமுறை ,சீசன் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வில்பட்டி பாரதி அண்ணா நகர் வழியாக மாற்று ரோடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பாதையில் இருந்து புலியூர் வழியாக ஆபத்தான வகையில் ரோடு அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இதில் உள்நோக்கம் உள்ளது.இதனால் விபத்து அபாயம் ஏற்படும்.நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் : அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு பரிசிலிக்கப்படும்.விஜயராகவன், மன்னவனுார்: கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் இருந்து கொடைக்கானலை வந்தடைய போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்படுகிறது. வனப்பகுதியில் ஆங்காங்கே பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும்.மண்டல துணை தாசில்தார் : அப்சர்வேட்டரி மன்னவனுார் ஆற்றுப்பாலத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அமைக்க சாத்தியக் கூறுகள் குறித்து வனத்துறையியிடம் கேட்கப்படும்.தனமுருகன், மன்னவனுார் : புவிசார் குறியீடு பெற்ற மலைப் பூண்டின் விதைப் பூண்டு குறைவாக உள்ளது. இதை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் : மலைப் பூண்டு பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை மானியம் அளிக்கிறது. புவிசார் குறியீடு பெற்ற பூண்டை விலையுயர்வு காரணமாக விவசாயிகள் விற்பனை செய்வதை குறைத்து குறிப்பிட்ட அளவு விதைக்காக பராமரித்து பாதுகாக்க வேண்டும்.முத்துமாணிக்கம், மன்னவனுார் : கொடைக்கானல் மேல் மலைப்பகுதியில் 20 டன் உருளைக்கிழங்குகள் விளைந்த பகுதியில் காட்டுப் பன்றியால் தற்போது அரை டன் கூட விளைச்சல் காணாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.வனவர் : காட்டு பன்றியை சுடுவது குறித்து வரையறை அதிகாரிகளிடம் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை