உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிப்., 8 முதல்வர் வீடு முற்றுகை:சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவு

பிப்., 8 முதல்வர் வீடு முற்றுகை:சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவு

வேடசந்துார்:தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி பிப்., 8 ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில மைய ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் தலைமை வகித்தார். போராட்டம் குறித்த அறிக்கையை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் முன்மொழிந்தார். மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தக் கோரி தற்செயல் விடுப்பு போராட்டம் ஜன.,30, 31ல் நடத்தப்படும். கோரிக்கையை நிறைவேற்றாத பட்சம் பிப்., 8 முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை