உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

பழநி : பழநியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார்.பழநி அடிவாரம், கிரிவிதி பகுதிகளில் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வணிக வளாகம் அமைக்க வேண்டும். பழநி பஸ் ஸ்டாண்டில் பழைய குத்தகைதாரர்களுக்கு கடைகளை வழங்க வேண்டும். பழநி நகரை தலைமையிடமாக கொண்டு பழநி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பிரமுகர் ஒருவருக்கு பழநி கோயில் அறங்காவலர் குழுவில் வாய்ப்பு அளிக்க வேண்டும். சிறு குரு வணிகர்களின் நீண்ட நாள் நிலுவை வரிகளால் பாதிப்படைந்த வனிகர்களுக்கு விடிவுகாலமாக சமாதான திட்டம் அறிவிக்கப்பட்டதை பாராட்டுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட வறுமையில் உள்ள வணிகர்களுக்கு ஓய்வுதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க மாவட்ட தலைவர் ஜேபி சரவணன், மண்டலத் தலைவர் கிருபாகரன், மாநில துணைத்தலைவர் ஹரிஹரமுத்தய்யர், மாநில இணைச்செயலாளர் பாஸ்கரன்,தேனி, கரூர் மாவட்ட தலைவர்கள், உடுமலை, மடத்துக்குளம் தாராபுரம் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !