உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களைத் தேடி உங்கள் ஊரில்: கலெக்டர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி திண்டுக்கல் மேற்கு வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.இந்தி திட்டத்தின்படி ஆர்.டி.ஓ., அலுவலகம், பலக்கனுாத்து, ரெட்டியார்சத்திரம், தருமத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் ஆரம்ப சுகாதார நிலையம், பொன்னிமாந்துறையில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை, கொத்தப்புள்ளி ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். ரெட்டியார்சத்திரம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாய திட்டங்கள், பயனடைந்த விவசாயிகள் விபரம் குறித்து கேட்டறிந்தார் . கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனையும் நடந்தது. ஆய்வில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பிரபாவதி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி