உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேவிகுளம், சின்னகுளத்தில் மீன்பிடி திருவிழா

தேவிகுளம், சின்னகுளத்தில் மீன்பிடி திருவிழா

நத்தம் : -நத்தம் செங்குளம் கிராமத்தில் உள்ள சின்னகுளம், சிறுகுடி தேவிகுளம் என 2 இடத்தில் நடந்த மீன் பிடி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர்.நத்தம் சிறுகுடி ஊராட்சி அணைமலைப்பட்டியில் உள்ளது தேவிகுளம். அதேபோல் நத்தம் செங்குளத்தில் உள்ள சின்னகுளம் இந்த 2 குளங்களிலும் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். மீன்பிடி திருவிழா நடந்தது.இதையொட்டி நத்தம், சிங்கம்புணரி, துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான மக்கள் குளத்தில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். அவர்கள் ஊத்தா என்ற மூங்கில் கூடைகள், வலைகளை வைத்து உற்சாகத்துடன் மீன்களை பிடித்தனர். கட்லா, ரோகு, கெண்டை, பாறை, ஜிலேபி ரக மீன்கள் சிக்கியது. கிடைத்த மீன்களை சமைப்பதற்காக வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை