உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ஜ., மாஜி நிர்வாகி வெட்டிக்கொலை

பா.ஜ., மாஜி நிர்வாகி வெட்டிக்கொலை

சாணார்பட்டி; திண்டுக்கல்லில் பா.ஜ., முன்னாள் நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம், ராஜக்காபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 39; பா.ஜ., முன்னாள் மண்டல நிர்வாகி. திருமணமாகாதவர். நேற்று மாலை மடூர் மணியக்காரன்பட்டி பிரிவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரு டூ - வீலர்களில் வந்த ஆறு பேர் கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன் விசாரணை நடத்தினர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை