மைசூர் ரயிலில் குட்கா
திண்டுக்கல்:திண்டுக்கல் வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக ரயில்களில் புகையிலைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல்படி திண்டுக்கல் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். நேற்று மைசூரில் இருந்து துாத்துக்குடி சென்ற மைசூர் எக்ஸ்பிரசில் சோதனையிட்டபோது முன்பதிவு இல்லா பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் பைகள் கிடந்தன.அதில் 20 கிலோ குட்கா ,தடை புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டனர். இதை பறிமுதல் செய்த போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட குட்கா ,புகையிலை பொருட்களை திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்தனர்.