மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
11 hour(s) ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
11 hour(s) ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
11 hour(s) ago
வடமதுரை: திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊத்துக்குளியை சேர்ந்தவர் சிவஞானம் 45. மினிலாரியில் வைக்கோல் வியாபாரம் செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றி கொண்டு நேற்று மதியம் வடமதுரை பகுதிக்கு வந்தனர். சிவஞானம் மகன் தினேஷ் 20, ஓட்டினார். வேலாயுதம்பாளையத்தில் இருந்து மூனாண்டிபட்டி கிராமத்திற்கு சென்ற போது ரோட்டின் குறுக்கே தாழ்வாக சென்ற மின்ஒயர்களில் உரசியதில் வைக்கோல் மீது தீப்பற்றியது. வைக்கோல் பண்டல்கள் தீயுடன் ரோட்டில் விழுந்தன. சுதாரித்த டிரைவர் லாரியை ஒதுக்குப்புறமான பள்ளத்தில் இறக்கினர். வேடசந்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வைக்கோலும், லாரியும் எரிந்து தீக்கிரையானது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago