உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரோட்டை ஆக்கிரமித்து பாதை: கண்டுக்காத நெடுஞ்சாலைத்துறை

 ரோட்டை ஆக்கிரமித்து பாதை: கண்டுக்காத நெடுஞ்சாலைத்துறை

கொடைக்கானல்: கொடைக்கானலில் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கொடைக்கானல் சீனிவாசபுரம் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சில வாரங்களாக தெரசா பல்கலை., பஸ்ஸ்டாப் பகுதியில் ரோட்டோரமாக கட்டுமான பணி நடந்த நிலையில் அங்கு அமைக்கப்படும் கடைகளுக்கு மெயின் ரோட்டை ஆக்கிரமித்து பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக நிழல் வலை அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி இடையே ஏராளமான இடங்களில் இது போன்ற ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறியும் கிடப்பில் உள்ள நிலையில் தற்போது மெயின் ரோட்டை ஆக்கிரமித்து நடக்கும் பணி குறித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சரவணன் கூறுகையில், ''ரோட்டை ஆக்கிரமித்து பாதை அமைக்கும் பணி குறித்து எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற பணிகளில் ஈடுபடும் பட்சத்தில் பாரபட்சமின்றி அகற்றப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை