உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மா தோப்புகளில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு

மா தோப்புகளில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு

சாணார்பட்டி : நத்தம் பகுதியில் தினமலர் செய்தி எதிரொலியாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மாந்தோப்புகளில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.நத்தம் பகுதியில் மா விவசாயம் செல் பூச்சி தாக்குதலாலும், பூக்களை தாக்கும் அதிகப்படியான புழுக்கள் உற்பத்தியாளும், புதிய கிளைகள் முளைத்ததாலும் மா விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக் கும்நிலை உள்ளது. தினமலர் நாளிதழில் மா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து செய்தி வெளியானது. இதையடுத்து சாணார்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலெக்ஸ் ஐசக் மா தோப்புகளில் ஆய்வு செய்து, பூச்சிகளை கட்டுப்படுத்தி மா விளைச்சலில் பெருக்குவதற்கான அறிவுரைகளை வழங்கினார். தத்துப்பூச்சி, அஸ்வினி பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் போன்ற சாறு உண்ணும் பூச்சிகள் முறையாக கட்டுப்படுத்த உழவியல் முறைகளான நெருக்க நடுதல் முறையை தவிர்த்தல், களைகளை நீக்கி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை