உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாற்றுத்திறனாளி பதவியேற்பு

 மாற்றுத்திறனாளி பதவியேற்பு

வேடசந்துார்: மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு பேரூராட்சியிலும், தலா ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக பதவி ஏற்க அரசு அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து வேடசந்துார் பேரூராட்சி 11 வது வார்டு ராஜகோபாலபுரத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நடராஜன் 60, வார்டு நியமன உறுப்பினராக பதவியேற்றார். இவருக்கு பேரூராட்சித் தலைவர் மேகலா, துணைத் தலைவர் சாகுல் ஹமீது, செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் நியமன உறுப்பினருக்கான சான்றிதழ் வழங்கினர். தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை