உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாற்றுத்திறனாளிகள் தின விழா

 மாற்றுத்திறனாளிகள் தின விழா

வேடசந்துார்: விருதலைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி சாரண சாரணியர் இயக்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேடசந்தூர் ஞான ஒளி பார்வையற்றோர் மறுவாழ்வு நல சங்கத்தில் சிறப்பு விழா நடந்தது. பள்ளி சாரண சாரணியர் இயக்க பொறுப்பாளர் ஜெயமீனாம்பிகை தலைமை வகித்தார். ஓய்வு தனி வட்டாட்சியர் சிவசுப்பிர மணியன் வரவேற்றார். சாரணிய இயக்க ஆணையர் வெங்கடேசன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் டைட்டஸ் எழிலன் முன்னிலை வகித்தனர். பார்வையற்றோர் மறுவாழ்வு மையத்தின் முன்பு ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள கூரை அமைப்பதற்கான நிதியை சங்க தலைவர் காளியப்பனிடம் வழங்கினர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. சங்க எழுத்தர் மணிமேகலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை