மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
20 minutes ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
20 minutes ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
22 minutes ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வடநாட்டு காரர்களால் குழந்தைகள் கடத்த படுவதாக போலி செய்தி பரவலுக்கு தொழில் போட்டியே காரணம் என்கின்றனர் போலீசார். இது மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் குழுந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதில் வடநாட்டு இளைஞர்கள் ஈடுபடுவதாக போலி தகவல்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. இது போன்ற அவதுாறு செய்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை பாயும் என எஸ்.பி., பிரதீப் எச்சரிக்கை விடுத்து ஒருசிலர் மீது சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளார். இதனிடையே இந்த செய்தி பரவலுக்கு பின்புலம் என்ன என்பதை போலீசார் விசாரணையும் மேற்கொண்டதில் கிடைத்த தகவல் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வடநாட்டு இளைஞர்கள் ரோட்டோரங்களில் கடை விரித்து பொம்மை, பர்னிச்சர், துணி வகைகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதன் தொழில் போட்டியில் தாக்குபிடிக்க முடியாத சிலர் இதுமாதிரியான தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். அந்த பகுதிகளில் வசிக்கும் பலருக்கு தொழில் வாய்ப்புகளும் பறிபோகின்றன. இதில் விரக்தியடையும் சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
20 minutes ago
20 minutes ago
22 minutes ago