உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை திண்டுக்கல் வருகை

 ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை திண்டுக்கல் வருகை

திண்டுக்கல்: சென்னை, மதுரையில் நடக்க உள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிக்கான கோப்பை, லோகோ திண்டுக்கல்லில் கலெக்டர் சரவணன் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப்போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு நடத்தப்படும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப்போட்டிகள் சென்னை, மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. நவ.28 ல் துவங்கி டிச.10 வரை நடக்கும் போட்டியில் வெற்றிபெறப்போகும் அணிக்கு வழங்கப்படும் உலகக்கோப்பை மற்றும் விளையாட்டுப் போட்டிக்கான லோகோ சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை விளையாட்டை விளம்பரப்படுத்தும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள ஹாக்கிவிளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை மற்றும் லோகோவை தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை தமிழக அரசு முன்னெடுத்து உள்ளது. அதன்படி நேற்று திண்டுக்கல் வந்த உலகக்கோப்பை, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சரவணன், சச்சிதானந்தம் எம்.பி., எம்.எல்.ஏ., செந்தில்குமார் அறிமுகப்படுத்தினர். கோப்பையுடன் அரசு அலுவலர்கள், பிரதிநிதிகள், ஹாக்கி விளையாட்டு வீரர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதில் மேயர் இளமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ