மேலும் செய்திகள்
கும்மிடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
17-Nov-2024
செம்பட்டி : திண்டுக்கல் -குமுளி ரோட்டில் செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் அமைந்துள்ளது. மழையால் நிரம்பி மறுகால் செல்கிறது. இப்பகுதியினர் மட்டுமின்றி இத்தடத்தில் செல்லும் ஐயப்ப பக்தர்களும் இங்கு நீராடுவதை குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலோர் தங்களது பழைய துணிகளை, கண்மாயின் மறுகால் பகுதியில் வீசி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவை நோய் தொற்றை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. இச்சூழலில் கண்மாய் பகுதியில் குவியும் கழிவுகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டனர். மறுகால், கரை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து கிடந்த பழைய துணிகள், பாலிதீன் பைகள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
17-Nov-2024