உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

 நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல்: நில அளவையர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், புதிய நகராட்சிகளில் சார் ஆய்வாளர் பணியை உருவாக்க வேண்டும், புல உதவியாளர் நியமனத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வினோத்பாலு தலைமை வகித்தார். கோட்ட தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் காஞ்சிகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் விக்னேஷ் ,அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி பேசினர். பொருளாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை