உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அடுக்கம் ரோட்டில் சாய்ந்த தடுப்புச்சுவர்

அடுக்கம் ரோட்டில் சாய்ந்த தடுப்புச்சுவர்

கொடைக்கானல : கொடைக்கானல் அடுக்கம் ரோட்டில் தடுப்புச்சுவர் சரிந்து போக்குவரத்து பாதித்தது.நேற்று முன்தினம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்தது. தொடர்ந்து அடுக்கம் கிராமத்திற்கு அருகே கட்டப்பட்ட கான்ங்கிரிட் தடுப்புச்சுவர் மழைக்கு சரிந்தது. இதையடுத்து இம்மலைப்பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட மலைக் கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ரோட்டில் தரமற்ற கான்கிரிட் தாங்கு சுவர்கள் கட்டமைக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது. தற்போது சரிந்துள்ளது சான்றாக உள்ளது. 12 ஆண்டுகளான நிலையில் இதுவரை பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையே நீடிக்கிறது. கனமழை தருணங்களில் மண் சரிவும், தாங்கு சுவர்களும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. ஆண்டுக்கணக்கில் நெடுஞ்சாலைத்துறை இந்த ரோட்டிற்கு கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கி ரோட்டை மேம்படுத்த மேற்கொண்ட பணி தரமற்ற பணியால் கனமழை தருணங்களில் சரியும் அபாயம் இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் இந்த ரோட்டை ஆய்வு செய்து போக்குவரத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று சரிந்த இடிபாடுகளை கொடைக்கானல் நெடுஞ்சாலை துறையினர் இயந்திரம் மூலம் மாலை சீர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை