உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் மீலாது விழா

ஒட்டன்சத்திரத்தில் மீலாது விழா

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மீலாது விழா நடந்தது. அரசு காஜி முகமது அலி அன்வாரி ஹஜ்ரத் கிப்லா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜகான் பாகவி, வட்டாரப் பொருளாளர் ஹசன்ஷரிப்பைஜி, துணைச் செயலாளர் சையது அபுதாஹிர்நாபி, கொசவபட்டி இமாம் தமீமுன் அன்சாரி ஹமீதி, சேலம் நுாருல் இஸ்லாம் அரபிக் கல்லுாரி பேராசிரியர் அபுதாஹிர் பாகவி பேசினர். ஒட்டன்சத்திரம், விருப்பாச்சி, ஸ்ரீராமபுரம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை பகுதிகளைச் சேர்ந்த ஜமாத்தார்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !