ஒட்டன்சத்திரம்: '' தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தமிழ்நாடு அரசின் சாதனைகளை வீடு தோறும் சென்று எடுத்து கூற வேண்டும்'' என அமைச்சர் சக்கரபாணி பேசினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஜன.31 ல் விருதுநகரில் நடக்கும் இளைஞரணி கூட்டத்தில் சீருடையில் கலந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் முதல்வர், துணை முதல்வரும் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள் ,என்றார். பழநி எம்.எல்.ஏ., செந்தில் குமார், மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், சுப்பிரமணி, பொன்ராஜ், பாலு, தங்கம், சீனிவாசன், சாமிநாதன், கவிதாபார்த்திபன், சேக் சிக்கந்தர் பாட்ஷா, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன், இளைஞரணி அமைப்பாளர் ஹரிகாரசுதன், துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், ஆனதராஜ், ரவிசங்கர், ராஜ்குமார், இப்ரின் ஆசித் கலந்து கொண்டனர்.