| ADDED : பிப் 04, 2024 04:19 AM
ஒட்டன்சத்திரம் : ''அரசின் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்,'' என ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:அரசு திட்டங்களின் பயன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைய அரசு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நிலம் கண்டறியப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விவசாய தொழிலை சிரமமின்றி மேற்கொள்ள அரசின் மானிய திட்டங்கள் பெரிதும் உதவியாக அமைகின்றன. சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம், வேளாண் உபகரணங்கள், வேளாண் இடுபொருட்கள் போன்ற மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், திட்ட இயக்குனர் திலகவதி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் காந்திநாதன் கலந்து கொண்டனர்.