உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நவீனமாகிறது ரயில்வே லெவல் கிராசிங் கீப்பருக்கு கேட் சக்கரத்தை சுற்றும் வேலை இனி இல்லை

நவீனமாகிறது ரயில்வே லெவல் கிராசிங் கீப்பருக்கு கேட் சக்கரத்தை சுற்றும் வேலை இனி இல்லை

வடமதுரை: வடமதுரை பகுதியில் ரயில்வே லெவல் கிராசிங்களை நவீனமாக்கும் பணி நடப்பதால் கேட் கீப்பருக்கு உடல் வலி ஏற்படுத்தும் கேட் சக்கரத்தை சுற்றும் வேலை இனி இருக்காது.ரயில்வே லெவல் கிராசிங்கில் முன்பு கேட்களை கீப்பர்களே கையால் இழுத்து மூடவும், திறக்கும் வகையில் கேட் இருந்தன. அடுத்த கட்ட அறிவியல் வளர்ச்சியாக கேட் கீப்பர் அறை அருகில் இருக்கும் ஒரு சக்கரத்தை சுற்றுவதன் மூலம் இரும்பு ரோப் கம்பிகள் வழியாக இரு பக்க கேட்டுகளையும் மூடி வந்தனர். இந்த கேட்டில் ஏதாவது பிரச்னை என்றால் இருபுறமும் இருக்கும் இரும்பு சங்கலிகளை குறுக்காக கட்டி ரோடு போக்குவரத்தை நிறுத்துவர். ஒவ்வொரு ரயிலுக்கு கேட்டை திறக்க கேட் கீப்பர்கள் கையால் இயந்திரத்தை சுற்ற வேண்டியிருக்கும். இதனால் உடல் அசதி ஏற்படுகிறது. தற்போது பெண்களும் அதிகளவில் கேட் கீப்பர்களாக நியமிக்கப்படும் நிலையில் அவர்களது நிலையும் மேலும் சிரமமாக உள்ளது.இந்நிலையில் லெவல் கிராசிங் கேட்களை தடையில்லாத மின்சக்தி மூலம் இயக்கும் வகையில் வடமதுரை பகுதியில் பணி நடந்து வருகிறது. கால் குதிரை சக்தி திறன் மின்சாரத்தில் இயங்கும் இதன் மூலம் சுற்றும் வேலை இனி இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை