உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடு பள்ளங்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்...

ரோடு பள்ளங்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்...

பள்ளத்தால் தடுமாறும் வாகன ஓட்டிகள்ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோடும் தாராபுரம் ரோடு சந்திக்கும் இடத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் டூவீலர்கள் இவ்வழியில் செல்ல முடியாமல் தினமும் இன்னல்களை சந்திக்கின்றனர். பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழ்ச்செல்வன் ஒட்டன்சத்திரம்.--------மின்கம்பத்தில் படர்ந்த செடிபழநி -திண்டுக்கல் ரோடு காலேஜ் பஸ் ஸ்டாப்பிலிருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோட்டில் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பத்தில் உள்ள செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிமலன், பழநி..---------சேதமான வடிகாலால் ஆபத்துபிலாத்தில் தென்னம்பட்டி ரோட்டில் குறுகிய வளைவு பகுதியில் சாக்கடை வடிகால் கட்டமைப்பு சிதைந்து கிடக்கிறது. இதனால் ரோடு விளம்பிலிருக்கும் பெரும் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்துகளை சந்திக்கின்றன. சீரமைப்பு பணி செய்யநெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.- முருகேசன், பிலாத்து.----------சுகாதாரக்கேடை ஏற்படுத்தும் கழிவுநீர்நத்தம் மேலமேட்டுப்பட்டியில் உள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள பைப்புகள் துருப்பிடித்து,சேதம் அடைந்து,தொட்டியின் கீழ் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் தொற்று பரவும் நிலை உள்ளது. பராமரிப்பு பணி செய்ய வேண்டும். முகமது சித்திக், மேல மேட்டுப்பட்டி.----------ரோடு பணிகளால் பாதிப்புநிலக்கோட்டை தாலுகா பிள்ளையார் நத்தத்தில் ரோடு அமைக்க ஜல்லிகற்கள் பெயர்த்து போடப்பட்டு பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியில் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும் .ராமகிருஷ்ணன், பிள்ளையார் நத்தம்.-----------குப்பையால் உருவாகும் சீர்கேடுபழநி சிவகிரிபட்டி ரயில்வே கேட் அருகே சாக்கடை கால்வாயில் குப்பையை கொட்டுவதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது. கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சுளா, சிவகிரிபட்டி .-----------கொசு உற்பத்தியாகும் கழிவுநீர்திண்டுக்கல் ராமர் காலனியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. கழிவுநீர் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிந்து, திண்டுக்கல்.----------.........................................................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை