உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / n பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்...அலட்சியம் : உள்ளாட்சிகளில் சுகாதார சீர்கேடுகளால் திணறல்

n பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்...அலட்சியம் : உள்ளாட்சிகளில் சுகாதார சீர்கேடுகளால் திணறல்

ஆத்தூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மையில் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் சுகாதாரக்கேடு அதிகரிக்க மஞ்சப்பை திட்டம் முடங்கி உள்ளது.மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதனை முறையாக செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம் நீடிக்கிறது. துவக்க காலத்தில் மக்கும், மக்காத குப்பை என பிரித்து சேகரிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக இத்திட்டத்தில் பல லட்சம் ரூபாயில் இரும்பு குப்பைத்தொட்டிகள் விலைக்கு வாங்கப்பட்டன. அடுத்த சில நாட்களிலே இவற்றின் பயன்பாடு முடங்கின. தற்போது பல உள்ளாட்சி அமைப்புகளில் இத்தொட்டிகள் பயன்பாடின்றி குப்பையோடு குப்பையாக மட்கி உள்ளன. பல இடங்களில் துாய்மை காவலர்கள் கழிவுகளை சேகரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். சிலர் குப்பை தொட்டியிலே கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட குப்பை தரம் பிரித்தல், மண்புழு உர உற்பத்தி கிடங்குகள் சேதமடைந்துள்ளன. பாலிதீன் கழிவுகள் உரிய முறையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தப்படுவதும் இல்லை. தெருக்கள், மயானம், நீரோடைகள், கண்மாய் உள்ளிட்ட நீராதாரங்கள் என கண்ட இடங்களில் இவை குவித்து எரிக்கப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களும் தீயிட்டு எரிக்கின்றனர். பாலிதீனுக்கு மாற்றாக அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மஞ்சப்பை திட்டம் துவங்கிய அதே வேகத்தில் முடங்கி கிடக்கிறது.

தவிர்த்தல் அவசியம்

திடக்கழிவு மேலாண்மையை ஏட்டளவில் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்துகின்றன.நீரோடை, கண்மாய்கள், உள்ளிட்ட நீராதார வழித்தடங்களில் பாலிதீன் கழிவுகள் குவித்து மழை நீர் செல்வதை தடை படுத்துகின்றன. தூய்ம காவலர்களே இவற்றை எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றன. பாலிதீன் கழிவுகளால் கழிவுநீர் கால்வாய் தூர்ந்து தொற்று பரப்பும் கேந்திரமாக மாறி உள்ளன. இவற்றிற்கு தீர்வு காண்பதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். ரமணா, கல்லூரி மாணவர், செம்பட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை