உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநி வையாபுரி குளக்கரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

 பழநி வையாபுரி குளக்கரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

பழநி: பழநி வையாபுரி குள கரைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பழநி நகரின் மையப் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் வையாபுரி குளம் உள்ளது. இதில் 5 ஏக்கர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு ஆக்கிரமிப்புகள் வையாபுரி குளத்தைச் சுற்றிலும் உள்ளன. குளத்தின் எல்லைகளை ஜி.பி.எஸ் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து, ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி