உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் ஆரஞ்சு சீசன் துவக்கம்

கொடையில் ஆரஞ்சு சீசன் துவக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆரஞ்சு சீசன் துவங்கியுள்ளது.இம்மலைப்பகுதியில் தாண்டிக்குடி, அடுக்கம், பாலமலை, பெருமாள்மலையில் ஏராளமான ஏக்கரில் ஆரஞ்சு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நவம்பரில் துவங்கிய சீசன் பிப்ரவரியில் நிறைவடையும். கீழ்மலைப்பகுதியில் சாம்பால் நோய், சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னையால் விளைச்சல் பாதித்தது. இதனால் சாகுபடி அளவு சுருங்கியது. தற்போது முழு அளவிலான சீசன் துவங்கிய நிலையில் பறிக்கப்படும் பழங்கள் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது.இதோடு கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோட்டில் விற்பனைக்காக ஆரஞ்சு பழங்கள் குவிக்கப்பட்டுள்ளது. கிலோ ரூ. 80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. மணம், சுவையுள்ள பழங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ