உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில்தைப்பூச விழா ஜன.19ல் துவக்கம்

பழநியில்தைப்பூச விழா ஜன.19ல் துவக்கம்

பழநி:பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா ஜன. 19ல் கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில்கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா நாட்களில் தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான வள்ளி,தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் ஜன.24 இரவு 7:00 மணிக்கு நடக்கிறது.இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, ஏழாம் நாளான ஜன. 25 மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், ஜன.28 இரவு 7:00 மணிக்கு தெப்பத்தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ