பனைவிதை நடும் நிகழ்ச்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தோட்டனுத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் குளத்தில் ஏ.பி.ஜெ., அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. சமூக ஆர்வலர் ஜெய்சங்கர், தலைவர் ரூப பாலன் தலைமை வகித்து விதை நடும் பணியை துவக்கி வைத்தனர். பேராசிரியர் ரவிச் சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சப்பை பயன் படுத்த வேண்டும் என வலியுறுத்தி மஞ்சப்பை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், சமூக சேவகர் மருதை கலாம், நிர்வாகிகள் சந்தோஷ் குமார், திருப்பதி ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.