உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் பனிச்சாரல்

கொடையில் பனிச்சாரல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டுள்ளனர்.இங்கு காலையில் பளிச்சிடும் வெயில், மாலையில் நிலவும் பனியின் தாக்கம், பனிச்சாரலுடன் அடர் பனிமூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நேற்று நீடித்தது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். அவ்வப்போது தரை இறங்கிய மேகக்கூட்டத்தை பயணிகள் ரசித்தனர். பனி மூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ