உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கலெக்டர் பெயரில் போலி கணக்கு: பணம் பறிக்கும் முயற்சியில் நபர்கள்

 கலெக்டர் பெயரில் போலி கணக்கு: பணம் பறிக்கும் முயற்சியில் நபர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் சரவணன் பெயரில் வாட்ஸ் ஆப்பில் போலி கணக்கு துவங்கிய நபர்கள் பணம் பறிக்க முயற்சி ஈடுபட்டுள்ளனர். கலெக்டர் சரவணனின் போட்டோவை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்த நபர்கள் வாட்ஸ் ஆப்பில் போலிக்கணக்கு துவங்கியதுடன் நண்பர் பரிந்துரை பட்டியலில் உள்ளவர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் பேசுவது போன்று கலெக்டர் சரவணன் பெயரில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். கலெக்டர் சரவணனுக்கு தகவல் தெரிய போலி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் கலெக்டரின் தனிப்பட்ட தகவல்கள், போட்டோக்கள் திருடப்பட்டதா, இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை