உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இரவு நேரங்களில் பஸ் சேவை குறைப்பால் பரிதவிப்பு! கி.மீ. கணக்கில் நடந்து செல்லும் அவலம்

இரவு நேரங்களில் பஸ் சேவை குறைப்பால் பரிதவிப்பு! கி.மீ. கணக்கில் நடந்து செல்லும் அவலம்

நாட்டில் அனைவருமே சொந்த வாகனங்களில் பயணிக்க தடை இல்லை என்றாலும், எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. அதோடு அதிக எண்ணிக்கை தனிநபர் பயன்பாடு வாகனங்கள் இருந்தால் காற்று மாசுபடுதல் பிரச்னையும் அதிகரிக்கும். இதனால் பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அரசுகள் வலியுறுத்துகின்றன. நாட்டில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 24 மணி நேரமும் விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமப்பகுதிகளை அருகிலுள்ள நகரங்களுடன் இணைக்கும் வகையில் டவுன் சேவையை அதிகாலை துவங்கி இரவு 11:00 மணி வரை இயக்கிட பயண நேர அட்டவணை தயாரித்து வட்டார போக்குவரத்து துறையில் அனுமதியும் பெறுகின்றனர்.இந்த பஸ் சேவைகளை பயணிகள் கூட்டம் இருக்கும் நேரங்களில் தடையின்றி இயக்கி வருமானம் பார்க்கின்றனர். ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் இரவு நேர கடைசி டிரிப்பை மாவட்டத்தில் பரவலாக பெரும்பாலான வழித்தடங்களில் அரசு, தனியார் பஸ்கள் இயக்குவதில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து நகர் பகுதிகளுக்கு விரைவு பஸ்கள் மூலம் வந்திறங்கும் பயணிகள் அதிக செலவில் வாடகை ஆட்டோ, கார் பிடிதது தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த வசதியும் இல்லாத இடங்களில் பல கி.மீ., துாரம் நடந்து சென்று மக்கள் சிரமப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை