உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சகதி ரோடை சீரமைக்க நாற்று நடும் போராட்டம்

 சகதி ரோடை சீரமைக்க நாற்று நடும் போராட்டம்

நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் சகதி நிறைந்த ரோடை சீரமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கராபுரம் பிரிவு தாமஸ் நகர் குடியிருப்பில் தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தரப் படவில்லை. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குடியிருப்பு சாலைகள் அனைத்தும் சகதியாக காட்சியளிக்கிறது. நாள்தோறும் அவதி அடைந்து வந்த மக்கள் ரோடுகளை சீரமைத்து தர வலியுறுத்தி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக சிலுக்குவார் பட்டி ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதி கேட்டு கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அல்லி முத்து, சகாயம் தலைமையில் பொதுமக்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை